திண்டுக்கல்: திண்டுக்கல் அருகேயுள்ள ரெண்டலபாறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (30). எலெக்ட்ரீஷியன். இவரது மனைவி அருணா (25), குழந்தைகள் ரக்சன் ஜோ (5), ரக்ஷிதா (3).
இந்நிலையில், நேற்று பிற்பகல் அருணா, அவரது 2 குழந்தைகள், அருணாவின் தாயார் சரோஜாதேவி (54) ஆகியோர் ஜார்ஜ் பைக்கில் திண்டுக்கல் நோக்கி புறப்பட்டனர். திண்டுக்கல் - நத்தம் சாலையில் நல்லாம்பட்டி பிரிவு அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக நத்தம் நோக்கிச் சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, ஜார்ஜ் ஓட்டிய பைக் உள்ளிட்ட 2 பைக்குகள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஜார்ஜ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். சரோஜாதேவியும், மற்றொரு பைக்கில் வந்த குழந்தைசாமி என்பவரும் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சரோஜாதேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago