தி.மலை, காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை மாநகராட்சிகளுக்கு ஆணையர்கள் நியமனம்

By கி.கணேஷ்

சென்னை: புதிதாக உருவாக்கப்பட உள்ள திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை செயலர் டி.கார்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு: “சேலம், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஆர்.பூங்கொடி அருமைக்கண், சேலம் மாநகராட்சி துணை ஆணையராகவும், சேலம் துணை ஆணையர் -1 பி.அசோக்குமார், சேலம் நகராட்சி நிர்வாக மண்டல இயககுனராகவும், மதுரை மாநகராட்சி துணை ஆணையர்-1 கே.சரவணன், செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும், வேலூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஜி.தனலட்சுமி, ஈரோடு மாநகராட்சி துணை ஆணையராகவும், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் எம்.செந்தில் முருகன் சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரியாகவும், அப்பதவியில் இருந்த வி.நவிந்திரன் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி, புதிதாக உருவாக்கப்படும் நாமக்கல் மாநகராட்சி ஆணையராகவும், செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் எஸ்.சித்ரா, புதிதாக உருவாக்கப்படும் காரைக்குடி மாநகராட்சி ஆணையராகவும், கடலூர் மாநகராட்சி ஆணையர் காந்திராஜன், புதிதாக உருவாக்கப்படும் திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையராகவும், திருநெல்வேலி மாநகராட்சி துணை ஆணையர் -1 ஏ.தாணுமூர்த்தி, தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும், தாம்பரம் மாநகராட்சி துணை ஆணையர்-2 கே.பாலு, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நகராட்சி நிர்வாக துணை இயக்குனர் எஸ்.லட்சுமி, வேலூர் நகரட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும், தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் கண்ணன், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராகவும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன், புதிதாக உருவாக்கப்பட உள்ள புதுக்கோட்டை மாநகராட்சியின் ஆணையராகவும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி துணை ஆணையர் செல்வபாலாஜி, நகராட்சி நிர்வாக துணை இயக்குனராகவும், திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, திருவேற்காடு நகராட்சி ஆணையராகவும், அப்பதவியில் இருந்த கணேசன், பொள்ளாச்சி நகராட்சி ஆணையராகவும், நாமக்கல் நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன், ஆவடி மாநகராட்சி உதவி ஆணையராகவும், காரைக்குடி நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் கொடைக்கானல் நகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சியாமளா, மன்னார்குடி நகராட்சி ஆணையராகவும், ஊட்டி நகராட்சி ஆணையர் ஏகராஜ், தேனி-அல்லிநகரம் நகராட்சி ஆணையராகவும், அப்பதவியில் இருந்த ஜஹாங்கீர் பாஷா ஊட்டி நகராட்சி ஆணையராகவும், விழுப்புரம் நகராட்சி ஆணையர் எச்.ரமேஷ், மறைமலைநகர் நகராட்சி ஆணையராகவும், வேலூர் மாநகராட்சி உதவி ஆணையர் எம்.ஆர்.வசந்தி, தாம்பரம் மாநகராட்சி உதவி ஆணையராகவும், கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சத்தியநாதன், விழுப்புரம் நகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்