கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு தின அமைதி பேரணி: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 7-ம் தேதி நடக்கிறது

By செய்திப்பிரிவு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஆக.7-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையி்ல் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவரும், திமுகவின் தலைவராக 50 ஆண்டுகள் இருந்தவருமான கருணாநிதி, கடந்த 2018-ம்ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார். இந்நிலையில் கருணாநிதியின் 6-ம் ஆண்டுநினைவு தினம் வரும் 7-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணை பொதுச்செயலாளர்கள் மற்றும் மூத்தநிர்வாகிகள் பங்கேற்கும் அமைதிப் பேரணி ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறஉள்ளது.

சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலை அருகில் இருந்து புறப்படும்பேரணி, காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முடிவடையும். தொடர்ந்துமுதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர், கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

இதற்கிடையே, இந்நிகழ்வில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமைக்கழக செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பல்வேறுநிலைகளில் உள்ள நிர்வாகிகள், திமுகவின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் என்று சென்னையில் உள்ள 6 மாவட்டங்களின் திமுக செயலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE