போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடியில் கடந்த மூன்று நாட்களாக நிலவி வந்த பதற்றம் தணிந்து, சகஜநிலை திரும்பியது. போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் நேற்று காலை முதல் படிப்படி யாக இயங்கத் தொடங்கின. கடைகள், வணிக நிறுவனங்கள் ஆங்காங்கே திறக்கப்பட்டன. மக்கள் அன்றாடப் பணிகளை தொடங்கினர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 22-ம் தேதி நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. கல்வீச்சு, வாகனங்களுக்கு தீவைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேறின. போலீஸ் துப்பாக்கிச் சூடு, தடியடி சம்பவங்களில் 2 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் பலியாயினர். 34 போலீஸார் உள்ளிட்ட 136 பேர் காயம் அடைந்தனர்.
இதனால், கடந்த மூன்று நாட்களாக கலவர பூமியாக தூத்துக்குடி காட்சியளித்தது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், தனியார் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் திறக்கப்படவில்லை. பேருந்துகள் இயங்கவில்லை. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
சமாதான பேச்சுவார்த்தை
தமிழக அரசால், கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, போக்குவரத்துத் துறை கூடுதல் செயலாளர் டேவிதார், காவல் துறை தென்மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எஸ்பி முரளி ராம்பா உள்ளிட்டோர், தூத்துக்குடி நகரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், ஹோட்டல் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோரை நேற்று முன்தினம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடைகள், வணிக நிறுவனங்களை படிப்படியாகத் திறக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
கடைகள் திறப்பு
அதன் பேரில், தூத்துக்குடி மாநகரில் நேற்று காலை ஆங்காங்கே சில கடைகள் திறக்கப்பட்டன. குறிப்பாக மருந்துக் கடைகள், பால் விற்பனை நிலையங்கள், டீக்கடைகள், பழக்கடைகள், காய்கறி கடைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டன. நகர தெருக்களில் உள்ள சிறிய கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. தூத்துக்குடி காமராஜ் காய்கறி சந்தை நேற்று முழுமை யாக திறக்கப்பட்டிருந்தது. அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆனால், முக்கிய சாலைகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், ஜவுளி கடைகள், நகைக்கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. நகரில் ஒருசில ஏடிஎம் மையங்கள் மட்டுமே திறந்திருந்தன. வங்கிகள் எதுவும் செயல்படவில்லை. தனியார் நிறுவனங்களும் பெரும்பாலும் செயல்படவில்லை.
பேருந்துகள் இயக்கம்
கடந்த மூன்று நாட்களாக முடங்கியிருந்த பேருந்து போக்குவரத்து நேற்று காலை 9.30 மணி அளவில் தொடங்கியது. தூத்துக் குடியில் இருந்து திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. ஆனால், பேருந்துகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் சென்றனர்.
தொடர்ந்து மற்ற பகுதிகளுக் கும் படிப்படியாக பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது.
நகர பேருந்து போக்குவரத்து காலை 11 மணியளவில் தொடங்கியது.
திரும்பும் சகஜநிலை
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் தூத்துக்குடியில் நேற்று காலை முதல் சகஜநிலை திரும்பியது. சாலைகளில் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து வழக்கம் போல் இருந்தன. கலவரத்தின்போது சேதமடைந்த போக்குவரத்து சிக்னல்கள் சரி செய்யப்பட்டு நேற்று இயங்கின. மக்கள் வழக்கம்போல் தங்கள் அன்றாடப் பணிகளை கவனிக்கத் தொடங்கினர்.
இலவசமாக உணவு
மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆவின் மூலம் தூத்துக்குடிக்கு தினமும் 11,500 லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாநகரில் உள்ள 10 அம்மா உணவகங்களிலும் 24 மணி நேரமும் இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அடுத்த மூன்று நாட்களுக்கு இலவசமாக உணவு வழங்கப் படும்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோர் மற்றும் அவர்களது உறவினர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago