மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 10 லட்சத்தை கடந்த வருகையாளர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வருகையாளர்கள் எண்ணிக்கை குறுகிய காலத்தில் 10 லட்சத்தை கடந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மதுரை - நத்தம் சாலையில் நவீன கட்டுமான அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ரூ.215 கோடியில் கட்டப்பட்டது. இந்த நூலகத்தை கடந்தாண்டு ஜூலை 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நூலகம் திறக்கப்பட்டுஓராண்டு கழிந்த நிலையில், நேற்று முதல்வர் ஸ்டாலி்ன் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘‘மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டுநூலகம் இத்தனை குறுகிய காலத்துக்குள் 10 லட்சம் வருகையாளர்களைக் கடந்துள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

‘அறிவிற்சிறந்த தமிழர் என உயர்ந்திட வேண்டும்’ என்ற எண்ணத்துடன் உருவாகிய இந்த மாபெரும் நூலகம்போல், அடுத்து திருச்சியிலும், கோவையிலும் நூலகங்கள் அமைய உள்ளன.

அறிவுத்தாகம் கொண்டோரது தாகத்தை தணித்து தமிழகத்தில் வாழ்வோரது சிந்தனையையும் வாழ்வையும் இத்தகைய நூல்கள்வளப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் பணிகளைத் தொடர்வோம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE