தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணிகள்: பல்லவன், வைகை, சார்மினார் உட்பட 20 ரயில்களின் சேவை மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால்பல்லவன், வைகை, சார்மினார் உள்ளிட்ட 20 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா அதிவிரைவு ரயில் (எண்.20691/92) வரும் ஆகஸ்ட்1 முதல் 14-ம் தேதி வரையிலும், மறுமார்க்கத்தில் 13-ம் தேதி வரையிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை எழும்பூர் - சேலம் அதிவிரைவு ரயில் (எண்.22153) ஆகஸ்ட்1 முதல் 14-ம் தேதி வரை சென்னைகடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

திருச்சி - பகத் கி கோத்தி (ராஜஸ்தான்) ஹம்ப்சஃபர் விரைவு ரயில்(20482) ஆகஸ்ட் 3, 10-ம் தேதிகளிலும், புதுச்சேரி - டெல்லி வாராந்திர விரைவு ரயில் (22403) ஆகஸ்ட் 7, 14-ம் தேதிகளிலும், ராமேசுவரம் - பனாரஸ் வாராந்திர விரைவு ரயில் (22535) ஆகஸ்ட் 7-ம் தேதியும், செங்கல்பட்டு - காக்கிநாடா துறைமுகம் சர்க்கார் விரைவு ரயில் (17643) ஆகஸ்ட் 8-ம் தேதியும், பிகானேர் -மதுரை அதிவிரைவு ரயில் (22632),ராமேசுவரம் - அயோத்யா கன்டோன்மென்ட் ஷ்ரத்தா சேது அதிவிரைவு ரயில் (22613) ஆகஸ்ட் 4, 11-ம் தேதிகளிலும் செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூர், கூடூர் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இந்த ரயில்கள் பெரம்பூரில் நின்று செல்லும்.

மும்பை லோகமான்ய திலக் -காரைக்கால் வாராந்திர விரைவு ரயில்(11017) ஆகஸ்ட் 3, 10-ம் தேதிகளில்திருத்தணி, மேல்பாக்கம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும். இந்தரயில் திருத்தணியில் நின்று செல்லும்.

புதுச்சேரி - காச்சிகுடா விரைவு ரயில் (17651) ஆகஸ்ட் 8, 9, 10-ம் தேதிகளில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மேல்பாக்கம், அரக்கோணம் வழியாகஇயக்கப்படும்.

காரைக்குடி - சென்னை எழும்பூர்பல்லவன் அதிவிரைவு ரயில் (12606),சென்னை எழும்பூர் - மதுரை வைகை அதிவிரைவு ரயில் (12635) ஆகஸ்ட் 1 முதல் 14-ம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரயில்கள் ஆகஸ்ட் 8, 9, 10-ம் தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும்.

சென்னை எழும்பூர் - திருச்சி மலைக்கோட்டை விரைவு ரயில் (12653) ஆகஸ்ட் 2 முதல் 15-ம் தேதி வரை செங்கல்பட்டில் இருந்தும், தாம்பரம் - நியூ தின்சுகியா (அசாம்) விரைவு ரயில் (15929) ஆகஸ்ட் 1, 8-ம் தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்தும் இயக்கப்படும்.

தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில் (20683) ஆகஸ்ட் 1, 4, 6, 8, 11, 13-ம் தேதிகளிலும், மறுமார்க்கத்தில் (20684) ஆகஸ்ட் 2, 5, 7, 9, 12-ம் தேதிகளிலும் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும். தாம்பரம் - ஹைதராபாத் சார்மினார் விரைவு ரயில் (12759/60) ஆகஸ்ட் 1 முதல் 14-ம் தேதி வரை இரு மார்க்கங்களிலும் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்.

சென்னை எழும்பூர் - மங்களூரு விரைவு ரயில் (16159) ஆகஸ்ட் 1 முதல்14-ம் தேதி வரையிலும், மறுமார்க்கத்தில் (16160) ஆகஸ்ட் 1 முதல் 13-ம் தேதிவரையிலும் திருச்சியில் இருந்து இயக்கப்படும்.

தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு ரயில் (22657) ஆகஸ்ட் 4, 5, 7, 11, 12, 14-ம் தேதிகளிலும், மறுமார்க்கத்தில் ஆகஸ்ட் 1, 5, 6, 8, 12,13-ம் தேதிகளிலும், தாம்பரம் - ஜசிதி(ஜார்க்கண்ட்) அதிவிரைவு ரயில்(12375) ஆகஸ்ட் 3, 10-ம் தேதிகளிலும்,மறுமார்க்கத்தில் (12376) ஆகஸ்ட் 7-ம்தேதியும், சில்காட் டவுன் (அசாம்) - தாம்பரம் நகான் விரைவு ரயில் (15630) ஆகஸ்ட் 2, 9-ம் தேதிகளிலும், மறுமார்க்கத்தில் (15629) ஆகஸ்ட் 5, 12-ம் தேதிகளிலும் எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

சந்திரகாச்சி - தாம்பரம் அந்த்யோதயா விரைவு ரயில் (22841) ஆகஸ்ட் 5, 12-ம் தேதிகளில் சென்னைகடற்கரை வரை இயக்கப்படும். மறுமார்க்கத்தில் (22842) ஆகஸ்ட் 7, 14-ம் தேதிகளில் எழும்பூர் வரை இயக்கப்படும்.

நியூ தின்சுகியா (அசாம்) - தாம்பரம்வாராந்திர விரைவு ரயில் ஆகஸ்ட் 5, 12-ம் தேதிகளில் எழும்பூர் வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்