சென்னை: தமிழகத்தின் அனைத்து போக்குவரத்துக் கழகத்திலும் 2014-ம்ஆண்டுக்குப் பிறகு புதிதாக ஓட்டுநர், நடத்துநர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல்இருந்து வந்தது.
தற்காலிகத் தீர்வாக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணிமனை பணிகளை மேற்கொள்ள 234 ஓட்டுநர்,நடத்துநர்கள் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில்நியமிக்கப்பட்டனர். இதற்குதொழிற்சங்கத்தினர் கடும்எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கவும் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஓட்டுநர், நடத்துநர்களை நியமிப்பதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்கஓட்டுநர், நடத்துநர்களை பணிக்குஅமர்த்த தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
» ம.பி.யில் ரூ.800 தின ஊதியம் பெறும் சுரங்கத் தொழிலாளிக்கு ரூ.80 லட்சம் வைரம் கிடைத்தது
» அரசியலைவிட நாட்டின் நலன் முக்கியமானது: கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி
நிறுவனத்தின் சார்பில் 700 ஓட்டுநர்கள், 500 நடத்துநர்களை பணிக்குஅனுப்ப வேண்டும். ஓட்டுநர்களுக்கு ரூ.27,934, நடத்துநர்களுக்கு ரூ.27,597 குறைந்தபட்ச ஊதியம், பி.எஃப், இஎஸ்ஐ உள்ளிட்டவை வழங்க வேண்டும். 11 மாதங்கள் முதல்கட்டஒப்பந்த காலமாகும்.
ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான விண்ணப்பங்களை ஆக.28 பிற்பகல் 2.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க (சிஐடியு) பொதுச்செயலாளர் வி.தயானந்தம் கூறும்போது, ``இடஒதுக்கீட்டை பறிக்கும் வகையில் தனியார் நிறுவனம் மூலம் பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கையை சிஐடியு வன்மையாககண்டிக்கிறது. இதுபோன்ற தனியார்மய நடவடிக்கையைக் கண்டித்து, வரும் 6-ம் தேதி அரசியல்கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago