95-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திரா பார்த்தசாரதியின் நாடகம் - ‘ஷ்ரத்தா’ குழு 27, 28-ல் அரங்கேற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்றஎழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஷ்ரத்தா நாடகக் குழுவினர் புதிய நாடகத்தை இன்றும், நாளையும் (ஜூலை 27, 28) சென்னை நுங்கம்பாக்கம் அலையன்ஸ் ஃபிரான்கைஸ் அரங்கில் நடத்த உள்ளனர்.

இதுகுறித்து ஷ்ரத்தா குழுவினர்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

14 ஆண்டுகளுக்கு முன்பு, நாடக விதைப்பு இயக்கமாக தொடங்கப்பட்ட ‘ஷ்ரத்தா’, இந்திரா பார்த்தசாரதியின் ‘அவுரங்கசீப்’ உள்ளிட்ட சோதனை முயற்சியிலான நாடகங்களை மேடையேற்றி உள்ளது.

அந்த வகையில், இந்திரா பார்த்தசாரதி எழுதியுள்ள ‘கொங்கைத்தீ’ நாடகம் அலையன்ஸ் ஃபிரான்கைஸ் அரங்கில், ஜூலை 27, 28-ம் தேதிகளில் மாலை 6.30 மணிக்கு அரங்கேற உள்ளது.இந்த நாடகம், ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதி காரத்தை அடிப்படையாக கொண்டு இந்திரா பார்த்தசாரதி எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு: https://insider.in/kongai-thee-tamil-play-jul27-2024/event என்ற தளத்தை அணுகலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE