மேட்டூர் அணை: நீர் வரத்தைவிட அதிகம் திறப்பு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், அணையின் நீர்மட்டம் 107 அடியாக இருந்து வருகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டது. அதிகமாக விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. சில நாட்களிலேயே, நீர்வரத்து குறையத் தொடங்கியது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால், நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

கடந்த சில நாட்களாக, அணைக்கு 5,554 கனஅடி தண்ணீரே வந்து கொண்டு இருந்தது. விநாடிக்கு 17,800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் 113 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், கடந்த சில நாட்களில் குறைந்து, நேற்று காலை 107.04 அடியாக இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE