காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், வாக்கெடுப்புக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் வாக்கெடுப்புக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இங்கு மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். இவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு புகார்களை கூறி வந்த நிலையில், திமுக கவுன்சிலர்களும் மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில், மேயர் தனது பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி 33 கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனிடம் நம்பிக்கை இல்லா தீர்மான மனு அளித்தனர்.

இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான மாநகராட்சி கூட்டம் வரும் 29-ம் தேதி நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்தார். இதை எதிர்த்து அதிமுக கவுன்சிலர் சிந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், மாநகராட்சி கூட்டத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க மேயருக்கு உத்தரவிட வேண்டும். விவாத கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த மாநகராட்சி ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.கே. ஸ்ரீராம், “மேயர் மகாலட்சுமியின் கணவர் யுவராஜ் பொதுமக்களை மிரட்டி பணம் வசூலிக்கிறார். காஞ்சிபுரத்தில் சாலை, குடிநீர் மற்றும் சாக்கடை பிரச்சினைகளை சரி செய்யக் கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அனைத்து கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் மேயருக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். ஆனால் மாநகராட்சி ஆணையர் மேயருக்கு ஆதரவாக செயல்படுகிறார்,” என்று கூறினார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மேயருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொத்தாம் பொதுவாக இருக்கிறது. பணம் வசூலித்ததாக கூறும் நிலையில், பாதிக்கப்பட்ட நபரின் புகார் இல்லை. எனவே, மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் வாக்கெடுப்புக்காக ஜூலை 29-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, மனுவை முடித்து வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்