மத்திய பாஜக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக நாளை ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்ததாக மத்திய பாஜக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் தமிழகம் போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் தமிழகம் சந்தித்த 2 பேரிடர் இழப்புகளுக்கு நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் மாற்றாந்தாய் மனப்போக்குடன் தமிழகத்தை வஞ்சித்த மத்திய பாஜக அரசை கண்டித்து ஜூலை 27-ம் தேதி சனிக்கிழமை (நாளை) காலை 10 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்