சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை ஆக.27-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியிருந்தன.
இது தொடர்பான 3-ம் கட்ட சமரசப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து ஜன.9, 10-ம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் 4 கட்டபேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், தொழிலாளர் தனி இணை ஆணையர் எல்.ரமேஷ் முன்னிலையில் நேற்று 8-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மாநகர போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் எஸ்.நடராஜன், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொழிற்சங்கத்தினர் தரப்பில் கே.ஆறுமுகநயினார், ஆர்.கமலகண்ணன், தாடி ம.ராசு, ஆர்.ஆறுமுகம், கே.வெங்கடேசன், டி.வி.பத்மநாபன், திருமலைச்சாமி, எம்.கனகராஜ், வி.தயானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாலை 4.15 மணியளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.
» சென்னை | பேருந்து கூரையில் ஏறி பள்ளி மாணவர்கள் ஆட்டம்: போலீஸார் விசாரணை
» சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இணைந்து நடைபயிற்சி மேற்கொண்ட அமீரக அமைச்சர்
இதில் தொழிற்சங்கங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நிர்வாகம் தரப்பில் முன்வைக்கப்பட்ட பதில்கள்: போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய பேச்சுவா்த்தை ஆக.27-ல் நடைபெறும். அதில் அனைத்து விஷயங்களையும் பேசிக் கொள்ளலாம். விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணியமர்த்தப்பட்ட தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி ரூ.853 வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
விரைவில் ஊதியம் வழங்கும் பணிகள் தொடங்கும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கான பணப்பலன்கள் ரூ.38 கோடி வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2022 முதல் தற்போது வரை ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வு கால பணப்பலன்களை வழங்கவும் நிதித்துறை அனுமதியளித்துள்ளது.
மலை பிரதேசங்களில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகளில் (புறநகர்) பணிபுரியும் நடத்துநர்களின் பேட்டா பிரச்சினைக்கு அரசுடன் கலந்து பேசி அறிவிப்பு வெளியிடப்படும். பெண் நடத்துநர் வாரிசு பணிக்கான உயரம் 150 செமீ என குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago