சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரளாவில் பரவிவரும் நிபா வைரஸ் காரணமாகஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில், அந்தச் சிறுவனின் உறவினர்கள், நண்பர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளுமாறும், பொதுச் சுகாதார நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறும் மத்திய அரசு கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் யாருக்காவது நிபா வைரஸ் தொற்று நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவசிகிச்சை அளிக்க வேண்டும்.
கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருவோரைபரிசோதனை செய்து அதற்கான அறிகுறிகள் இல்லை என்பதை உறுதி செய்த பின்பே அவர்களை அனுமதிக்க வேண்டும்.
அறிகுறிகள் இருப்பவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து போதிய சிகிச்சைஅளிக்க வேண்டும். இந்தத் தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago