சென்னை: தமிழகத்தில் 9 போலீஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
திருப்பத்தூர் மாவட்டகூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கம், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும், மதுரை மாவட்டம் மேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பிரீத்தி, ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராகவும், மதுரை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் வேல்முருகன், மேலூர் துணை காவல் கண்காணிப்பாளராகவும், திருச்சி மாவட்டம் முசிறி துணை காவல் கண்காணிப்பாளர் யாஷ்மின், தமிழ்நாடு போலீஸ் அகாடமி துணை காவல் கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், நெல்லை (கிராமப்புற) துணை காவல்கண்காணிப்பாளர் பாலசுந்தரம், மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் துணை காவல் கண்காணிப்பாளராகவும், திருச்சி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புபிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், கள்ளக்குறிச்சி (தலைமையக) கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தாம்பரம் ஆணையரகம்: இதேபோல் தாம்பரம் காவல் ஆணையரக சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன், மணிமங்கலம் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராகவும், அங்கிருந்த ராஜபாண்டியன், ஈரோடு மாவட்டசிவில் சப்ளை சிஐடி துணை காவல் கண்காணிப்பாளராகவும், நாகப்பட்டினம் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ், வேதாரண்யம் துணை காவல் கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago