விருதுநகர்: விருதுநகரில் புதிதாக ரூ.70.57 கோடி மதிப்பில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆகஸ்ட் இறுதி வாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இப்புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.
ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக இருந்த விருதுநகர் மாவட்டம் 1985-ல் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அதன்பின், விருதுநகர்- சாத்தூர் சாலையில் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் பழுதடைந்ததால் புதிதாக ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட திட்டமிட்டு அதற்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, விருதுநகரில் புதிதாக ரூ.70.57 கோடியில் 6 தளங்களுடன் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார்.
தற்போது, தனியார் கட்டுமான நிறுவனத்தின் மூலம் பொதுப்பணித்துறையின் மேற்பார்வையில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் தரை தளத்தில் 28,729 சதுர அடி பரப்பளவில் தொழிலக பாதுகாப்புத்துறை, குற்ற வழக்குகள் பதிவுத்துறை, புள்ளியியல் துறையும், 2-ம் தளத்தில் 32,926 சதுர அடி பரப்பளவில் தேசிய தகவல் மையம், மாவட்டக் கருவூலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், வருவாய்த் துறை துணை ஆட்சியர் அலுவலகங்களும் கட்டப்பட்டுள்ளன.
3-ம் தளத்தில் 33,894 சதுர அடி பரப்பளவில் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, கலால், முத்திரை துணை ஆட்சியர்கள் அலுவலகம், தமிழ் வளர்ச்சித் துறை உதவி ஆணையர் அலுவலகம், உள்ளூர் நிதி தணிக்கை அலுவலகம் மற்றும் சுற்றுலா துறை அலுவலகங்களும் கட்டப்பட்டுள்ளன.
» ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு சென்னையில் கண்டனப் பேரணி - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
» புதுச்சேரியில் இன்னும் 2 மாதங்களில் அண்ணா மினி ஸ்டேடியம் தயார்!
மேலும், 4-ம் தளத்தில் 33,894 சதுர அடி பரப்பளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கூட்ட அரங்கம், கம்பிவட தொலைக்காட்சி அலுவலகம், சிறு கூட்ட அரங்கம், காணொலி கூட்ட அரங்கம், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை, துணை ஆட்சியர்கள் மற்றும் பயிற்சி ஆட்சியர்கள் அலுவலகங்களும், 5-ம் தளத்தில் 28, 901 சதுர அடி பரப்பளவில் அவசர கால உதவி மையம், மருந்து கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், ஆதிதிராவிடர் நலத்துறை, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகம், சிறப்பு வட்டாட்சியர் அலுவலகங்களும் உள்ளன.
6-ம் தளத்தில் 10,803 சதுர அடி பரப்பளவில் கனிம வளத்துறை துணை இயக்குநர் அலுவலகம், நிதி மற்றும் தணிக்கைத் துறை உதவி இயக்குநர் அலுவலகம், மகளிர் நலன் மேம்பாட்டு துறை, மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகமும் கட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில், “கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு நிறைவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் இறுதி வாரத்தில் தமிழக முதல்வரால் இப்புதிய கட்டிடம் திறக்கப்பட உள்ளது” எனத் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago