சென்னை: மக்களவைத் தேர்தல் முடிவு தொடர்பாக 23 தொகுதி அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை நேற்று நிறைவடைந்தது. 24-ம் தேதி முதல் இதர தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனையை மேற்கொள்ள உள்ளார் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து அறிவதற்காக மக்களவைத் தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் கடந்த 10-ம் தேதி முதல் கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுகபொதுச் செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
நேற்று 8-வது நாளாக விழுப்புரம், தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து கூட்டத்தில் பழனிசாமி பேசும்போது, எந்த பிரச்சினையாக இருந்தாலும் கட்சி தலைமையின் கவனத்துக்கு நிர்வாகிகள் கொண்டுவர வேண்டும். கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
நேற்றுடன் 23 மக்களவைதொகுதி நிர்வாகிகளுடனான ஆலோசனை நிறைவடைந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம்விசுவநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டனர்.
மீண்டும் 24-ல் அலோசனைக் கூட்டம் தொடங்குகிறது. அதன்படி,24-ல் தேனி, ஆரணி, 25-ல்தென்காசி, ஈரோடு, 26-ல் திருப்பூர்,கடலூர், 29-ல் திண்டுக்கல், திருவள்ளூர், 30-ல் தூத்துக்குடி,நாமக்கல், 31-ல் கள்ளக்குறிச்சி, சேலம், ஆக.1-ல் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை,5-ம் தேதி புதுச்சேரி, கரூர்தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago