பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்து: தாய், மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பேருந்தை முந்த முயன்றபோது இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், தாய், மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

மதுக்கூர் அருகேயுள்ள விக்ரமம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி ராதிகா(30). இவர்களதுமகன் மோனிஷ்(9), அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

2 இருசக்கர வாகனங்கள்... இந்நிலையில், ராதிகா நேற்று இருசக்கர வாகனத்தில் மகன் மோனிஷை அழைத்துக்கொண்டு, பரவாக்கோட்டையில் உள்ளஉறவினர் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.

வழியில், மதுக்கூரிலிருந்து மன்னார்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை ராதிகா முந்த முயன்றார். அந்த சமயத்தில், எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனமும், ராதிகாவின் இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டன.

இதில், ராதிகா, அவரது மகன் மோனிஷ், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த, திருவாரூர் மாவட்டம் பைங்காநாடு பகுதியைசேர்ந்த ஆனந்த் மகன் விக்னேஷ்(18) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

தனியார் கல்லூரி மாணவர்: உயிரிழந்த விக்னேஷ், கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம்ஆண்டு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தகவலறிந்து சென்ற மதுக்கூர் போலீஸார் 3 பேரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்