பள்ளிக்கல்வி, சிறை துறைகள் சார்பில் ரூ.273 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.264.15 கோடியில் வகுப்பறை உள்ளிட்ட கட்டிடங்கள், சிறைத்துறை சார்பில் ரூ.9.45 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களைமுதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத்திட்டத்தை வேலூரில் கடந்தாண்டுதொடங்கி வைத்தார். இத்திட்டத்தின், ஒரு பகுதியாக பள்ளிக்கல்வித் துறையில் ரூ.114.29 கோடியில் 26 மாவட்டங்களில் உள்ள 106 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 515 வகுப்பறை, 12 ஆய்வகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ், ஊரக வளர்ச்சித் துறை மூலம்குழந்தைநேய வகுப்பறை கட்டும் திட்டத்தின்கீழ், ரூ.68.66 கோடியில் 25 மாவட்டங்களில் உள்ள 176 அரசுதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 441 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 28 மாவட்டங்களில் உள்ள 28 தகைசால் பள்ளிகளில்ரூ.61.70 கோடியில் பள்ளிக்கட்டிடங் கள் புனரமைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையில் ரூ.19.50 கோடியில் கூட்ட அரங்குகள், அலுவலக அறைகள், காணொலி கூடங்கள் ஆகியவற்றுடன் முதன்மைக் கல்வி அலுவலர்அலுவலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கல்வி வளாகம் கட்டப்பட்டுள்ளன. மொத்தம், ரூ.264.15 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலியில் திறந்து வைத்தார்.

சிறைத்துறை கட்டிடம்: தமிழ்நாடு சிறைகளின் அங்கீகரிக்கப்பட்ட இடவசதி 24,342ஆகும். தற்போது 23,500 சிறைவாசிகள் அனுமதிக்கப்பட்டுள்ள னர். சிறைகளில் இடநெருக்கடி யைக் குறைக்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் சார்பில் ரூ.9 கோடியே 45 லட்சத்து25 ஆயிரம் செலவில் திண்டிவனத் தில் கட்டப்பட்டுள்ள கிளைச் சிறைக் கட்டிடம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்வுகளில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, அன்பில் மகேஸ், தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா,உள்துறை செயலர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி செயலர் எஸ்.மதுமதி, காவலர் வீட்டுவசதிக் கழக தலைவர் அ.கா.விஸ்வநாதன், சிறைத்துறை தலைமை இயக்குநர் மகேஷ்வர் தயாள், ஒருங்கிணைந்த கல்வி மாநில திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE