கோவை: தொடர் மழையால் சிறுவாணி அணை நீர்மட்டம் 40.54 அடியாக உயர்வு

By இல.ராஜகோபால்

கோவை: சிறுவாணி அணையின் சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்து வரும் அடை மழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 40.54 அடியாக உயர்ந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரானது கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 22 வார்டுகள் மற்றும் கோவை மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப் புற ஊராட்சிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக சிறுவாணி அணியின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 2 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது.

சிறுவாணி அணை(கோப்பு படம்)

கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி அணையின் நீர்மட்டம் 11.32 அடியாக இருந்த நிலையில், தற்போது 40.54 அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கு தொடர்ச்சி மலையில் அடை மழை தொடரும் நிலையில் வரையறுக்கப்பட்ட 45 அடி உயரத்தை சிறுவாணி அணை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE