தாம்பரம் பணிமனையில் பொறியியல் பணிகளால் 55 மின்சார ரயில்களின் சேவை ரத்து: ஜூலை 23 முதல் ஆக.14 வரை இயக்கப்படாது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு ஜூலை 23-ம் தேதி முதல் ஆக.14-ம் தேதி வரை காலை 9.30, 9.56,10.56, முற்பகல் 11.40, நண்பகல் 12.20, 12.40, இரவு 10.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு ஜூலை 23 முதல் ஆக.14-ம் தேதி வரைகாலை 9.40, 9.48, 10.04, 10.12, 10.24,10.30, 10.36, 10.46, 11.06, 11.14,11.22,11.30, 11.50, நண்பகல் 12.00, 12.10, 12.30,12.50, இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரிக்கு ஜூலை 23-ம் தேதி முதல் ஆக.14-ம் தேதி வரை இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளன.

தாம்பரம் - சென்னை கடற்கரைக்கு ஜூலை 23 முதல் ஆக.14-ம் தேதி காலை10.30, 10.40, 11.00, 11.10, 11.40, நண்பகல்12.05, 12.35, மதியம் 1.00, 1.30 இரவு 11.40ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டிக்கு ஜூலை 23-ம் தேதி முதல் ஆக.14-ம் தேதிவரை இயக்கப்படும் மின்சார ரயில், இதுபோல, காஞ்சிபுரம் - சென்னை கடற்கரைக்கு காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு ஜூலை 23-ம் தேதி முதல் ஆக.14-ம் தேதி வரை காலை 11.00, 11.30, நண்பகல் 12.00, இரவு 11.00 ஆகியநேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது. இதுதவிர,கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரைக்குஅதே நாட்களில் இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

சிறப்பு ரயில்கள்: இந்த ரயில்களுக்கு மாற்றாக, சென்னை கடற்கரை - பல்லாவரத்துக்கு அதேநாட்களில் இரவு 10.40, 11.05, 11.30 ஆகிய நேரங்களிலும், பல்லாவரம் - சென்னை கடற்கரைக்கு காலை 10.20, 11.00, 11.20, 11.40, நண்பகல் 12.00, 12.40, மதியம் 1.00, 1.20, 1.40, ஆகிய நேரங்களில் சிறப்பு பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE