தமிழகத்தில் மேலும் 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

By கி.கணேஷ்

சென்னை: தமிழகத்தில் ஏற்கெனவே 29 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் கூடுதலாக மேலும் 36 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவு: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் உள்ளுறை ஆணையராக ஆஷிஷ்குமாரும், மீன்வளத் துறை ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு, போக்குவரத்துத் துறை ஆணையராகவும், அப்பதவியில் இருந்த ஏ.சண்முக சுந்தரம் கைத்தறித் துறை இயக்குனராகவும், தமிழ்நாடு பாடநூல்கழக மேலாண் இயக்குனர் ஆர்.கஜலட்சுமி மீன்வளத் துறை இயக்குனராகவும், தமிழ்நாடு பாடநூல் கழக இயக்குனராக வேளாண் துறை சிறப்பு செயலர் பி.சங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரி டி.மோகன், உணவுப்பொருள் வழங்கல் ஆணையராகவும், மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் ஜெ.ஜெயகாந்தன், ஜவுளித்துறை ஆணையராகவும், அப்பதவியில் இருந்த எம். வள்ளலார் தமிழ்நாடு கடல்சார் வாரிய தலைமை செயல் அதிகாரியகவும், கடலூர் ஆட்சியர் ஏ.அருண் தம்புராஜ் தமிழ்நாடு சுகாதாரத்திட்ட இயக்குனராகவும், அப்பதவியில் இருந்த எம்.கோவிந்தராவ், மின்னாளுமை முகமை இயக்குனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உயர்கல்வித் துறை முன்னாள் செயலர் ஏ.கார்த்திக் சிட்கோ மேலாண் இயக்குனராகவும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறநிலையத்துறை ஆணையராகவும், அப்பதவியில் இருந்த கே.வி.முரளிதரன் சமூக பாதுகாப்பு இயக்குனராகவும், பெரம்பலூர் ஆட்சியர் கற்பகம் சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் மேலும் 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அமுதா, ராதாகிருஷ்ணன் உட்பட 29 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: முன்னதாக, தமிழகம் முழுவதும் 29 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை மாநாகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருந்த குமரகுருபரன் ஐஏஎஸ், சென்னை மாநாகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். | விரிவாக வாசிக்க > உள்துறைச் செயலர் அமுதா மாற்றம்: தமிழகம் முழுவதும் 29 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE