முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எம்எல்ஏவாக பதவியேற்றார் அன்னியூர் சிவா

By கி.கணேஷ்

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எம்எல்ஏவாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) காலையில் பதவியேற்றுக் கொண்டார்.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ-வாக இருந்த புகழேந்தி சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் காலகட்டத்தில் உடல் நலக்குறைவால் மறைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா வெற்றிபெற்றார். இதையடுத்து, மறுநாள் அவர் சென்னை வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகளிடம் வாழ்த்துப் பெற்றார்.

தொடர்ந்து, இன்று காலை அவர் எம்எல்ஏ-வாக பதவியேற்றுக் கொண்டார். பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் அன்னியூர் சிவா உறுதிமொழி எடுத்து எம்எல்ஏ-வாக பதவியேற்றார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை தொடர்ந்து செய்வேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி வாக்களிக்காதவர்களுக்கும் உண்டான அடிப்படை வசதிகளை செய்துதருவேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்