கர்நாடக அணைகளில் நீர் திறப்பு: ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர்வரத்து

By செய்திப்பிரிவு

தருமபுரி/மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்துதிறக்கப்பட்ட தண்ணீர் தமிழகத்துக்கு வரத் தொடங்கியுள்ளது. ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று மாலை நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 14-ம் தேதி காலை அளவீட்டின் போது நீர்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக பதிவானது. ஆனால், நேற்று காலை 6 மணி அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 4,500 கனஅடியாக குறைந்தது.

இதற்கிடையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகா மாநில அணைகளுக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்தது. இதனால், அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியதால் உபரி நீர் முழுமையாக தமிழகத்தை நோக்கி காவிரியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நிலவரப்படி கர்நாடக மாநில அணைகளில் இருந்து விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று மாலை இது விநாடிக்கு 25ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்தை நோக்கி திறந்து விடப்பட்ட உபரி நீர் நேற்றுமாலை 3 மணியளவில் ஒகேனக்கலை அடுத்த பிலிகுண்டுலு பகுதிக்கு வந்து சேர்ந்தது.

இவ்வாறு விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்த நீர்வரத்து பின்னர் சீராக உயர்ந்து நேற்று மாலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி என்ற நிலையை எட்டியது.

அதன்பிறகும் நீர்வரத்து சீராகஉயர்ந்து வந்தது. பிலிகுண்டுலுவில் மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தொடர்ந்து நீர்வரத்தின் அளவை கண்காணித்து வருகின்றனர்.

பரிசலுக்கு தடை: அதேபோல, தருமபுரி மாவட்ட காவிரி கரையோர பகுதிகளை வருவாய், வனம் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.ஒகேனக்கல் காவிரியாற்றில் வெளியில் தெரிந்த பாறைகள், நீர்வரத்து உயர்வால் படிப்படியாக தண்ணீரில் மூழ்கத் தொடங்கியுள்ளன. இதனிடையே காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆற்றில்பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூரில்... மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு 4,047 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42.76 அடியில் இருந்து, நேற்று 43.22 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பும் 13.55 டிஎம்சி-யில் இருந்து, நேற்று 13.80 டிஎம்சி-யாக உயர்ந்தது. இந்நிலையில், அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்