சுரங்க மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயில்களை வணிக கடைகளுடன் உருவாக்க திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், 43 கி.மீ. சுரங்கப் பாதையில் 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. பல்வேறு இடங்களில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் அமைய உள்ள சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு வாயில் பகுதிகளை வணிக மால் அல்லது கடைகளுடன் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

டிக்கெட் அல்லாத வருவாயை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இதைஉருவாக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வணிக வளர்ச்சியின் ஒரு பகுதியாக இது இருக்கும்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் வெறும் நுழைவு வாயில் மட்டும் அமைக்காமல், வணிக மால் அல்லது வணிக கடைகளும் இணைந்து கட்டப்படும்.

அதுபோல தான் வடிவமைப்பு செய்யப்படுகிறது. அதாவது, ஒருங்கிணைந்த வர்த்தக மேம்பாட்டின் கீழ், மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயில்களில் வர்த்தக கடைகள் இடம்பெறும்.

மெட்ரோ ரயில் நிலைய நுழைவுவாயிலுக்கு வரும் பயணிகள் நேரடியாக மெட்ரோ ரயில் நிலைய நடைமேடை செல்ல முடியாது. வணிக வளாகம் அல்லது கடைகளை கடந்துதான் நடைமேடைக்குச் செல்ல முடியும்.மெட்ரோ ரயில் நிலைய சிறிய நுழைவுவாயில் உள்ளபகுதிகளில் சிறிய கடைகள் உருவாக்கப்படும்.

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, வாங்கப்பட்ட இடங்களின் மதிப்பு மிகவும் அதிகம். எனவே, இந்த இடங்களை திறம்பட பயன்படுத்துவது அவசியமாகிறது. மேலும், டிக்கெட் இல்லாத வருவாய் ஈட்ட வேண்டும். அப்போது, தான் சிறப்பான சேவை மக்களுக்கு கொடுக்க முடியும்; செலவுகளையும் சமாளிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆலந்தூர், ஆயிரம் விளக்கு, மந்தைவெளி, திருமங்கலம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில் பகுதிகளில் வணிகக் கடைகள் அமைப்பது தொடர்பாக திட்டமிடப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்