சென்னை: என்கவுன்ட்டர் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்றது.
நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினர் இந்த விழாவில் பங்கேற்றனர். திருமண விழாவில் ஒரு பாடலுக்கு மணமகன் ஆனந்த் அம்பானியுடன் இணைந்து ரஜினிகாந்த் நடனம் ஆடியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், மும்பையில் இருந்து விமானம் மூலம் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருமண விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன்-2’ படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. நாளைதான் (16-ம் தேதி) பார்க்க இருக்கிறேன்” என்றார்.
அப்போது, “சட்டம் - ஒழுங்கு பிரச்சினைக்கு என்கவுன்ட்டர் தீர்வு ஆகுமா” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை” என்று கூறிவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
» பெட்ரோலுக்கு பணம் கேட்டதால் பங்க் ஊழியரை கார் பானட்டில் இழுத்து சென்ற காவலர்
» உச்சம் தொட்ட ஸோமாட்டோ பங்குகள்: இந்திய எலைட் பில்லியனர் கிளப்பில் நிறுவனர் தீபிந்தர் கோயல்
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago