திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடியாது: சீமான் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நாகரிக அரசியல் தெரியாத திமுக, இழிவாகப் பேசுவதற்கு என்றே பேச்சாளர்களை வைத்திருந்தது.

ஆனால், நாங்கள் சண்டாளர் என்று பேசிவிட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். சண்டாளர் என்ற சமூகம் இருப்பதே எங்களுக்குத் தெரியாது. கிராமங்களில் சண்டாளன் என்பது இயல்பாக உபயோகப்படுத்தும் வார்த்தை. முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடலை வெளியிட்டது அதிமுகதான். இவ்வளவு காலம் சண்டாளர் என்று சொல்லும்போது வலிக்காமல், திடீரென்று ஏன் இப்போது வலிக்கிறது. அந்த சமூகத்தினருக்கு கஷ்டமாக இருந்தால், சாணார், நாடார் ஆனதைப்போல, கள்ளர், மறவர் எல்லாம் தேவர் ஆனதைபோல வேறு பெயர் வைத்துக்கொள்ளலாமே?

மேலும், நான் பேசியது முதல்வரின் தந்தை குறித்து. எனவே,மற்ற அமைச்சர்களின் கேள்விகளுக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?

குடிப்பெருமை பேசுவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார். திமுக கூட்டணியில் இருக்கும் அவருக்கு வெளிப்படையாக சவால் விடுகிறேன்.அவரால் பொது தொகுதியில் நின்றுவெல்ல முடியுமா, திமுகவிடம்ஒரு பொது தொகுதியைக்கூட வாங்க முடியாத திருமாவளவன், 16 பொது தொகுதியில் தனித்துப்போட்டியிட்ட என்னை சாதிப்பெருமை பேசுவதாகக் கூறுகிறார்.

கூட்டணி என்பது எனது கோட்பாட்டில் இல்லை. அதேபோல, திராவிடக் கட்சிகளுடன் என்னால்கூட்டணி வைக்க முடியாது. ஒருவேளை கூட்டணி அமைந்தால், அதுமாற்றாக இல்லாமல், ஏமாற்றமாக இருக்கும். இவ்வாறு சீமான் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்