“திமுக எடுத்த ஏலம் இது...” - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா காட்டம்

By எஸ். நீலவண்ணன்

விக்கிரவாண்டி: “நாங்கள் டெபாசிட் இழந்ததாகவே இருக்கட்டும். இந்த வெற்றி உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்று திமுக வேட்பாளரை கேளுங்கள். கடந்த தேர்தலைவிட கூடுதலாக நாங்கள் 2,000 வாக்குகள் பெற்றுள்ளோம்.இது தேர்தலே இல்லை. திமுகவினர் ஏலம் எடுத்துள்ளனர்,” என்று விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296​​ வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா 10,602 வாக்குகள் பெற்றார். நோட்டாவில் 853 வாக்குகள் பதிவானது. 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அபிநயா, “நாங்கள் டெபாசிட் இழந்ததாகவே இருக்கட்டும். இந்த வெற்றி உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்று திமுக வேட்பாளரை கேளுங்கள். கடந்த தேர்தலைவிட கூடுதலாக நாங்கள் 2 ஆயிரம் வாக்கு பெற்றுள்ளோம். காணை பகுதியில் திமுக இளைய வாக்காளர்களுக்கு கஞ்சா பட்டுவாடா செய்தனர். இது தேர்தலே இல்லை. திமுகவினர் ஏலம் எடுத்துள்ளனர். வருங்காலங்களில் இடைத்தேர்தலை ஏலம் எடுத்துவிடுங்கள். அதனால்தான் அதிமுக பின்வாங்கியது. இது பணநாயகத்தின் வெற்றி, ஜனநாயகத்தின் மரணம்,” என்று கூறினார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்