இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட விவரம் வருமாறு: மொத்தம் 90 காலியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்ட குருப்-1முதல்நிலைத் தேர்வுக்கு 2 லட்சத்து 38 ஆயிரத்து 255 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியின்மை காரணமாக 8 பேரின்விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக குருப்-1 முதல்நிலைத் தேர்வெழுத தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்நிலைத் தேர்வு இன்று காலை தமிழகம் முழுவதும் 797 மையங்களில் நடைபெறுகிறது. சென்னையில் 124 மையங்களில் 37,891 பேர் தேர்வெழுத உள்ளனர்.

டிஇஓ தேர்வு: இதற்கிடையே, இந்துசமய அறநிலை ஆட்சித்துறை உதவி ஆணையர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த முதல்நிலைத் தேர்வு (குருப்-1 பி மற்றும் குருப்-1 சி) தமிழகம் முழுவதும் 63 மையங்களில் நேற்று நடந்தது. கணினி வழியில் நடத்தப்பட்ட இத்தேர்வை 8,433 பேர் எழுதினர்.

முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சிபெறுவோருக்கு அடுத்த கட்டமாகமெயின் தேர்வு தனித்தனியாக நடைபெறும். இந்த தேர்வில் விரிவாகபதிலளிக்கும் வகையில் விடைத்தாள் அமைந்திருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்