சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் எடுக்கப்பட்ட 11 பேரிடம் போலீஸார் தொடர்ந்து 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி, பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின்முன் மர்ம கும்பலால் வெட்டிகொலை செய்யப்பட்டார்.
இக்கொலை தொடர்பாக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின்தம்பி பொன்னை பாலு உள்பட11 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். தனது அண்ணனான ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாகவே கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக பொன்னை பாலு வாக்குமூலமாக தெரிவித்ததாக போலீஸார்தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட11 பேரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களை 7 நாட்கள் போலீஸ்காவலில் விசாரிக்க அனுமதி கேட்கப்பட்ட நிலையில் 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட 11 பேரிடமும் தனித் தனியாகவும் குழுவாகவும் போலீஸார் இன்று 3-வது நாளாக விசாரித்து வரு கின்றனர்.
» கள்ளச் சாராயம் விற்றால் கடும் தண்டனை: சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
» சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க பரிந்துரை
இதில், “ஆம்ஸ்ட்ராங் துப்பாக்கிவைத்திருப்பார் என்பதால் எடுத்தஎடுப்பிலேயே அவர் நிலைகுலையும் அளவுக்கு தாக்குதல் இருக்க வேண்டும் எனவும், இதற்காக பல நாட்கள் நோட்டம் விட்டு, ரத்தம் அதிகமாக வெளியேறும் ரத்தக்குழாய்களை குறிவைத்து வெட்ட வேண்டும் என்பதற்காக கழுத்து, தொடை, கணுக்கால் நரம்பு ஆகிய பகுதிகளில் வெட்டினோம்” என்றும் கைது செய்யப்பட்டவர்கள் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டது யார்? கூலிப்படைக்கு கைமாறிய பணம் எவ்வளவு, கைதானவர்களுக்கான சட்ட உதவி மற்றும் பண உதவிசெய்தது யார்? என்பது உட்படபல்வேறு தகவல்கள் போலீஸாருக்கு தெரியவேண்டியுள்ளது. இதை வெளிக்கொண்டு வரும்வகையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கைது செய்யப்பட்டவர்களின் செல்போன்களைப் பறிமுதல் செய்து அவர்கள் யார்? யாருடன் பேசி உள்ளனர் என்றும், அவர்களது வங்கி கணக்கு விபரங்கள் குறித்தும் தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago