இலங்கையிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘காலா’

By எஸ்.முஹம்மது ராஃபி

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் காலா.

இது ரஜினிகாந்தின் 164-வது திரைப்படம் ஆகும். இதில் நானா படேகர், ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, சம்பத் ராஜ், சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காலா திரைப்படத்தின் முன்னோட்டமும், காலா படத்தின் புகைப்படங்களும் மார்ச் 1-ம் தேதி வெளியிடப்பட்டன. காலா திரைப்படத்தின் முன்னோட்டம் உலக அளவில் வரவேற்பை பெற்று ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரப்பப்பட்டு வருகிறது.

யூ டியூப் இணையதளத்தில் நேற்று காலை வரை சுமார் 2 கோடியே 71 லட்சம் பார்வையாளர்களால் காலா திரைப்படத்தின் முன்னோட்டம் பார்க்கப்பட்டுள்ளது. இந்திய யூ டியூப் டிரெண்டிங்கிலும் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது.

இலங்கை எழுத்தாளர் புத்தகம்

காலா திரைப்படம் முன்னோட்டத்துடன் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் ஒன்றில் ரஜினிகாந்த் ஒரு நாற்காலி மீது கால் போட்டு அமர்ந்திருக்கிறார். அவர் அருகில் உள்ள மேஜையில் புலவர் குழந்தை எழுதிய ராவண காவியம், இலங்கை எழுத்தாளர் கே.டானியல் படைப்புகள் உள்ளிட்ட சில புத்தகங்கள் உள்ளன.

கே.டானியல் படைப்புகள் என்ற புத்தகம் பஞ்சமர், கோவிந்தன், அடிமைகள், கானல், பஞ்ச கோணங்கள், தண்ணீர் என 6 நாவல்களின் தொகுப்பு ஆகும். இந்த நாவல்களில் இலங்கையில் தலித் மக்கள் எதிர் கொண்ட தீண்டாமைக் கொடுமைகளை கே.டானியல் பதிவு செய்துள்ளார்.

இதனால் காலா படத்திலும் இது குறித்த காட்சிகள் இடம் பெறலாம் என இலங்கையில் உள்ள ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். காலா திரைப்படம் இந்தியாவிலும், இலங்கையிலும் ஜூன் 7-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்துக்கு இலங்கையில் பல்வேறு இடங்களில் கட்அவுட், பேனர்களை அவரது ரசிகர்கள் வைக்கத் தொடங்கியுள்ளனர்.

முன்னதாக இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கடந்த 10.3.2017 அன்று வவுனியாவில் வீடு கட்டித்தரும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகள் இலங்கைக்கு செல்லக்கூடாது என்று கேட்டுக் கொண்டதால் தனது பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்து, இலங்கை ரசிகர்களுக்கு கடிதம் எழுதினார்.

ரஜினி எழுதிய கடிதத்தில், நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். நேரம் கூடிவரும்போது நாம் நேரில் சந்திப்போம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்