கல்வி நிறுவனங்களின் அனுமதியற்ற கட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டம்: 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களால் கட்டப்படும் கட்டிடங்களுக்கு உரியஅனுமதி பெற்றிருக்க வேண்டும்.இவ்வாறு அனுமதி பெறாத கட்டிடங்களை வரன்முறைப்படுத்தி, அவற்றுக்கு அனுமதி அளிக்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 2011-ம் ஆண்டுக்கு முன் திட்டமிடப்படாத பகுதிகள், மலைப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டிடங்கள் வரன்முறைப்படுத்தப்பட்டு வருகின்றன.அந்தவகையில், அனுமதியற்றகட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான அனுமதியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிடுமாறு, நகர ஊரமைப்பு இயக்குநர், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்று, வீட்டுவசதித் துறைச் செயலர் காகர்லா உஷாஅனுப்பிய கடித்தில் கூறியிருப்பதாவது: நகர ஊரமைப்பு இயக்குநர்கோரிக்கையை ஏற்று, 2011 ஜனவரி1-ம் தேதிக்கு முன் திட்டமிடப்படாத பகுதிகள் மற்றும் மலைப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களின் அனுமதியற்ற கட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான அனுமதியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து அரசு ஆணையிடுகிறது.

மேலும், மலைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களின் அனுமதியற்ற கட்டிடங்களுக்கு, திட்ட அனுமதி பெற 2020 பிப். 18-ம் தேதி அரசு வெளியிட்ட அனைத்து வழிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்