சென்னை: இன்று நடைபெறவுள்ள பாம்பன் சுவாமிகள் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
திருவான்மியூரில் உள்ள பாம்பன் குமரகுருதாசர் சுவாமிகள் கோயிலில் இன்று (ஜூலை 12)கும்பாபிஷேக விழாவை விமரி சையாக நடத்த அறநிலையத் துறை திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்நிலையில் கும்பாபிஷேகம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தும், இந்த கும்பாபிஷேக விழாவுக்கு தடை கோரியும் சைவ சித்தாந்த பெருமன்றம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கொடிமரம், பலிபீடம் இல்லை: இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் நடராஜன், அருண்குமார் ஆகியோர், “பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி அடைந்துள்ள அந்த இடத்தில் கொடிமரம், கலசம், பலிபீடம் கிடையாது. இவையெல்லாம் இருந்தால் மட்டுமே கும்பாபிஷேகம் நடத்த முடியும்.
எனவே பாம்பன் சுவாமிகள் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தமுடியாது. இதுவரை அந்த ஜீவ சமாதியில் எந்தவொரு கும்பாபிஷேகமும் நடத்தப்படவில்லை. பாம்பன் சுவாமிகளின் சமாதியை திட்டமிட்டு கோயில் என மாற்றி அந்த இடத்தில் அவசரம், அவசரமாக கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது. இது திட்டமிட்ட அத்துமீறல் என்பதால் இந்த கும்பாபிஷேக விழாவுக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டனர்.
அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், “கடந்த 1958-ம் ஆண்டே பாம்பன் சுவாமிகள் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. உயர் நீதிமன்றம் கும்பாபிஷேகம் நடத்த எந்த தடையும் விதிக்காத நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படியே அங்கு கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்படுகிறது.
இதற்காக பாலாலயமும் ஏற்கெனவே முடிந்துவிட்டது. அங்கு முருகன் மற்றும் விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிலை வைத்து வழிபாடு நடத்தப்படுவதால் பாம்பன் சுவாமிகள் கோயிலில் பல ஆண்டுகளுக்குப்பிறகு தற்போதுதான் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது” என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதிகள், “பாம்பன் சுவாமிகள் கோயிலில் பூஜைகள் மற்றும் விழாக்களை அறநிலையத் துறை நடத்தலாம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்காத நிலையில் கும்பாபிஷேகம் தொடர்பான விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” எனக் கருத்து தெரிவித்தனர்.
கோயிலா? ஜீவசமாதியா? - அதேபோல, “மனுதாரர் தரப்பு கோரிக்கையையும் தற்போது ஏற்க முடியாது. பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி அடைந்துள்ள இடம் கோயிலா அல்லது ஜீவசமாதியா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டியுள்ளதால் இந்த வழக்கில் அறநிலையத் துறை அதிகாரிகள் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.
பாம்பன் சுவாமிகள் கோயில் விவகாரம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றமும் கும்பாபிஷேக விழாவுக்கு தடை விதிக்கமுடியாது என மறுப்பு தெரிவித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago