அரசு கேபிள் நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் காவலான் கேட் பகுதியில், தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தை கண்டித்து, தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கேபிள் டிவி சங்க துணை செயலர் நேசக்குமார் கூறும் போது, “தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில், கேபிள் டிவி ஆபரேட்டர்களை கலந்தாலோ சிக்காமல் தன்னிச்சையாக ஆன் லைன் மூலம் இணைப்புகளை அடிக்கடி உயர்த்துகின்றனர். முன்னறிவிப்பின்றி இணைப்பை துண்டிக்கின்றனர். மேலும், சட்டத்திற்கு புறம்பாக ஆபரேட்டர் களிடம் உள்ள சாதனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்கின்றனர்.

`டிராய்’ விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆபரேட்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு கேபிள் டிவி இணைப்பு வழங்க வேண்டும். `டிராய்’ பரிந்துரைத்த கட்டணத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் உள்ள அரசியல் தலையீடு மற்றும் கட்டப்பஞ்சாயத்துகளை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அந்தந்த மாவட்டங்களின் தலைநகரங்களில், தமிழக அரசின் கவனத்தை ஈர்ப்ப தற்காக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலான்கேட் பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி னோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்