சென்னை: சென்னையில் நடைபெற்ற கார் பேரணியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் விதவிதமான உடைகளில் பங்கேற்றனர். இந்தியன் ஆயில் நிறுவனம், டச்சஸ் கிளப் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மகளிர் கார் பேரணி, சென்னையில் ‘மெட்ராஸ் - மெட்ராஸ்’ என்ற மையக் கருத்துடன் நேற்று நடைபெற்றது.
மயிலாப்பூரில் உள்ள சவேரா ஓட்டல் வளாகத்தில், 23-வது கார்பேரணியை ஓட்டல் நிர்வாக இயக்குநர் நீனா ரெட்டி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா, செயல் இயக்குநர் எம்.சுதாகர், நடிகர் அருண் விஜய், நடிகை சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
100 கார்கள் பங்கேற்பு: இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் பங்கேற்றன. போட்டி விதிகளின்படி ஒவ்வொருகாரிலும் மொத்தம் 4 பேர் இருந்தனர். ஒருவர் காரை ஓட்ட, மற்றொருவர் வழிகாட்டியாக இருந்தார். மற்ற இருவரும் கொடுக்கப்பட்ட விநாடி-வினா போட்டிக்கான விடைகளை தேடினர். 30-40கி.மீ. வேகத்தை தாண்டக் கூடாது.
ஜிபிஎஸ் கேமரா செயலி மூலம்செல்லும் இடங்களின் புகைப்படத்தை அனுப்புவது உள்ளிட்டகட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. பல குழுக்கள் தங்கள்குடும்பத்தினருடன் பேரணியில்பங்கேற்றனர். இதில் கலந்துகொண்ட பெண்கள் ‘மெட்ராஸ் - மெட்ராஸ்’ என்ற கருத்துக்கு ஏற்ப,மடிசார் புடவை, வேட்டி சட்டை,ஆட்டோ ஓட்டுநரின் சீருடை என விதவிதமான உடைகளை அணிந்தபடி காரை ஓட்டினர்.
போட்டி தொடங்கி சுமார் 2.30மணி நேரத்தில் 50-65 கி.மீ. தூரம் பயணித்து, சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு சென்ற பேரணி, மீண்டும் சவேரா ஓட்டலை வந்தடைந்தது. போட்டியில் 7 பிரிவுகளின்கீழ் வெற்றி பெற்ற முதல் 3 கார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago