ஆடியோ விவகாரத்தில் கைதாகியுள்ள அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி பணியாற்றிய கல்லூரியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, கல்லூரி கல்வித்துறை சார்பில் விசாரணை அதிகாரி சந்தானத்திடம் 100 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டையிலுள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றிய நிர்மலாதேவி, தன்னிடம் பயின்ற மாணவியரை பாலியல்ரீதியாக தவறான பாதைக்கு வழிகாட்டிய புகாரில் கைது செய்யப்பட்டார். சிபிசிஐடியின் விசாரணையில், மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்த விசாரணை அதிகாரி சந்தானம் 3 கட்ட விசாரணையை நிறைவு செய்தார். இவர் பொதுமக்களிடம் இருந்தும் மனுக்களை பெற்றார். அப்போது, கல்லூரியில் இதுவரை நடந்த பணி நியமனம், உயர் கல்வித்துறை நிதியை கையாண்டதில் நடந்துள்ள முறைகேடுகள், நிர்மலா தேவியின் செயல்பாட்டின் பின்னணியில் உள்ள கல்லூரி நிர்வாகிகள், கூடுதல் கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடை வசூலிப்பு என ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
நூறு பக்க அறிக்கை
இதுகுறித்து முழுமையான அறிக்கை அளிக்கும்படி, மதுரை மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநர் கே.கூடலிங்கத்துக்கு சந்தானம் உத்தரவிட்டிருந்தார். ஒருவாரத்துக்குமேல் கல்லூரி கல்வித்துறை அதிகாரிகள் குழு கல்லூரி நிர்வாகிகள், பணியாளர்கள் உட்பட பலரிடம் விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் சந்தானத்திடம் 100 பக்க அறிக்கையை ஆவணங்களுடன் தாக்கல் செய்தனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியது: நிர்மலாதேவி பணியாற்றிய தனியார் கல்லூரி மீது ஏற்கெனவே பல புகார்கள் வந்தன.
பணி நியமனத்திலும் விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கூடுதல் கட்டணத்துக்கு உரிய கணக்குகள் இல்லை. நிர்மலாதேவி குறித்து பலமுறை புகார்கள் வந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேர்வு முடிவுகள் வெளியிடுவதிலும் தவறு நடந்துள்ளது. இதுகுறித்த அனைத்து தகவல்களையும் அறிக்கையில் விரிவாக தெரிவித்துள்ளோம். பல்வேறு ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளோம். இந்த அறிக்கையின் அடிப்படையில் ஆளுநர் நடவடிக்கை மேற்கொண்டால், கல்லூரி நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்த வாய்ப்புகள் அதிகம் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago