சென்னை: திருவள்ளூர் மாவட்டம் புதுராஜ கண்டிகை கிராமத்தை சேர்ந்த முரளி என்ற விவசாயியை, கடந்த ஆண்டு நவ.6-ம் தேதி பாம்பு கடித்தது. இதையறிந்த அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள கண்ணன் கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக முரளியை அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். காலதாமதமாக அழைத்துச் சென்றதால் முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக முரளியின் மனைவி அருணா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 24 மணி நேரமும் இயங்க வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்தால்தான் என்னுடைய கணவர் பாம்பு கடிக்கு சிகிச்சையின்றி உயிரிழந்தார். எனவே, கண்ணன் கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். குழந்தைகளின் கல்வி செலவையும் அரசு ஏற்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் பிறப்பித்த உத்தரவு: உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த முரளியின் மனைவி அருணாவுக்கு அரசு துறையில் தற்காலிக அடிப்படையில் பணி வழங்க வேண்டும். அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவுக்காக ரூ.2 லட்சத்தை அவர்களுடைய வங்கிக் கணக்கில் 2 வாரத்தில் அரசு செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
» மோடி தலைமையிலான அரசு அடுத்த மாதம் கவிழும்: லாலு பிரசாத் பேச்சு
» ஹாத்ரஸ் சம்பவத்திற்கு நிர்வாக அலட்சியமே காரணம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago