சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கின் விசாரணையை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் நோக்கிலேயே செந்தில் பாலாஜி தரப்பில் புதிது புதிதாக மனுக்களை தாக்கல் செய்து வருவதாக அமலாக்கத் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக்கோரிய மனுவை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
வங்கி அசல் ஆவணங்களைக் கோரி தாக்கல் செய்த மனுக்களும் அமர்வு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம். எனவே அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனுவின் தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும். மேலும், விடுபட்ட வங்கி ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும், எனக் கோரப்பட்டு இருந்தது.
» தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 விரைவு ரயில்களில் 2 நிமிடங்களில் முடிந்த டிக்கெட் முன்பதிவு
இந்த மனுக்கள் மீதான விசாரணை முதன்மை நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ், இந்த வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு புதிது, புதிதாக மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீது வாதிட அவகாசம் வழங்கக் கூடாது. வாதங்களை இப்போதே கேட்டு முடிவு செய்ய வேண்டும், என ஆட்சேபம் தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதி, இந்த மனுக்கள் மீதான செந்தில் பாலாஜி தரப்பின் வாதத்துக்காக விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். அதேபோல செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும் நீதிபதி வரும் ஜூலை 4 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago