சென்னை: காவல் துறையினருக்கு பணியின்போது உயிரிழப்போ, உடலுறுப்பு இழப்போ, காயமோ ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத் தொகை உயர்த்தப்படுவதாக முதல்வர் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில், காவல், தீயணைப்புத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், துறை தொடர்பாக வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய போக்குவரத்துக் காவல் நிலையங்கள், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை புறக்காவல் நிலையம், படப்பை, ஆதமங்கலம்புதூர், திருப்பரங்குன்றம் கோயில் ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.
பேரணாம்பட்டு காவல் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற பரிசீலிக்கப்படும். கொளத்தூர், கேளம்பாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும்.
» டாஸ்மாக் மதுவில் ‘கிக்’ இல்லை: அமைச்சர்களின் பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம்
» கள்ளச் சாராய வழக்கில் அதிகாரிகளையும் சேர்க்க வேண்டும்: அனைத்து கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தல்
கோவை - பொள்ளாச்சி, திருப்பூர் - நல்லூர் ஆகிய இடங்களில் 229 காவல் குடியிருப்புகள் கட்டப்படும். காவல் துறையில் பணியாற்றுவோருக்கு பணியின்போது உயிரிழப்போ, உடலுறுப்பு இழப்போ, காயமோ ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத் தொகைஉயர்த்தப்படும். சிறப்பு இலக்குப் படையில் பணியாற்றும் காவல்துறையினருக்கும் அத்தொகை உயர்த்தி வழங்கப்படும்.
ஊர்க்காவல் படையில் பணியாற்றுவோர் உயிரிழக்கும்போது அவர்கள் குடும்பத்துக்கு தமிழ்நாடு ஊர்க்காவல் படை நலன் மற்றும் கருணைக் கொடை நிதியிலிருந்து வழங்கப்படும் இழப்பீடு ரூ.15 ஆயிரத்தில் இருந்துரூ.1 லட்சமாகவும், காயமுற்றவர்களுக்கு வழங்கப்படும் நிதி ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.
கோவை மாநகராட்சியை விபத்தில்லா மாநகரமாக மாற்ற ரூ.5 கோடி மதிப்பில் செயல்திட்டம் செயல்படுத்தப்படும். தஞ்சாவூர் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் ரூ. 5.21 கோடியில் புதிய ஆயப்பிரிவு உருவாக்கப்படும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் பயன்பாட்டுக்காக 1,500 தற்காப்பு உடைகளும், மீட்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சிறிய உபகரணங்களுடன் கூடிய 3 ஆயிரம் மீட்பு உடைகளும் ரூ.4.50 கோடியில் வழங்கப்படும்.
ஏரல், கருமத்தம்பட்டி, மடத்துக்குளம், கோவளம், படப்பை, திருநெல்வேலி மாநகரம், புதுவயல் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் நிறுவப்படும். சமயபுரம், மேடவாக்கம், பெரம்பலூர், தியாகதுருகம், நீடாமங்கலம், கொளத்தூர் ஆகிய 6 தீயணைப்பு நிலையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும். இவை உட்பட 100 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.
காப்பீட்டில் பெற்றோர்: அரசு அலுவலர்களைச் சார்ந்து வாழும் அவர்களது பெற்றோரும் பலன் அடையும் வகையில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களின் விருப்பத்தைப் பெற்று, தற்போது நடைமுறையில் உள்ள புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மறுசீரமைக்கப்படும். மேலும், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட நடைமுறைச் சிக்கல்களை களைய தலைமைச் செயலர் தலைமையில் விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்தவும், நெறிமுறைகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago