சென்னை: அதிமுக உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நீர்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் பேசும்போது, “பேரவை குழுவுக்கான தேர்தல் முடிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், நியமன குழுவில் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த 26-ம் தேதி முதல் பேரவையின் விதிகளுக்கு மாறாக தொடர்ந்து கோஷமிட்டு கொண்டிருந்த அதிமுக உறுப்பினர்களை இந்த தொடர் கூட்டம் முடியும் வரை பேரவையின் பணிகளில் இருந்து நீக்கி வைக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, பேரவையால் ஒரு மனதாக ஏற்றுகொள்ளப்பட்டது. முதல்வரின் கருத்தை ஏற்று, கூட்டத்தொடர் என்பதை கூட்டம் என மாற்றிகொள்ளலாம் என்கிற தீர்மானத்தை முன்மொழிகிறேன். தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ள கூட்டத் தொடர் என்பதை கூட்டம் என மாற்றி கொள்ளப்படுவதாக பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago