சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை தொடர்ந்து, மதுவிலக்கு சட்டத்தில் தண்டனையை கடுமையாக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் உள்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்ற, பாமக சட்டப்பேரவை கட்சித் தலைவர் ஜி.கே.மணி, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேசினார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து சில நாட்களாகவே கள்ளக்குறிச்சி விவகாரத்தைத் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை உயிருக்கு ஆபத்துவிளைவிக்கக் கூடிய பொருட்களை காய்ச்சுதல், விற்பனைசெய்தல் போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும், கடுமையாகவும் இல்லை. இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கி, இக்குற்றங்களை முற்றிலும் தடுக்க முதல்கட்டமாக தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் -1937ல் திருத்தமசோதா ஒன்று நாளை (இன்று)சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago