சென்னை: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு, உதவிகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:
ஜூன் 27 - குறு, சிறு, நடுத்தரதொழில் நிறுவனங்கள் நாள். திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், பட்டியலினத்தவர், பழங்குடியினர் தொழில் தொடங்க புத்தொழில் நிதி, சந்தைப்படுத்த தேவையான வசதிகள், தமிழ்நாடு தென்னை நார் கொள்கை 2024, தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க கொள்கை 2023 என பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அரசு செயல்படுத்தி வருகிறது.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்னும் பெரும் பங்காற்ற தேவையான ஊக்குவிப்பையும், உதவிகளையும் தொடர்ந்து வழங்குவோம்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago