கள்ளச் சாராய விவகாரத்தில் சதி என அவதூறு; ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: கள்ளச் சாராய விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதற்காக ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய விவகாரத்தில் அண்ணாமலையின் சதி இருக்குமோ என்று சந்தேகப்படுவதாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசும்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு நஷ்டஈடு கேட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ், ஆர்.எஸ்.பாரதிக்கு அனுப்பியுள்ள நோட்டீ
ஸில் கூறியிருப்பதாவது: உண்மைக்கு புறம்பான, தவறான கருத்துகளை கூறி, மக்கள் மத்தியில் அண்ணாமலையின் கண்ணியத்தை குலைக்கும் வகையிலும், களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அவதூறு கருத்துகளை ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

நிபந்தனையற்ற மன்னிப்பு... இந்த நோட்டீஸ் பெற்ற 3 நாட்களில் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் போதை மறுவாழ்வு மையம் அமைக்க ரூ.1 கோடியை மான நஷ்டஈடாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

30 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

கார்ட்டூன்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்