இந்திய கடல் எல்லையை தாண்டக்கூடாது: மீனவர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: இரண்டு மாத மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்து, கடந்த ஜுன் 15-ம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்றுவருகின்றனர். கடந்த 10 நாட்களில்மட்டும் புதுக்கோட்டை, ராமேசுவரம், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 5 விசைப்படகுகளை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், 36 தமிழக மீனவர்களைக் கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், விசைப்படகு ஒன்றைசுற்றி வளைத்தபோது எதிர்பாராதவிதமாக இலங்கை கடற்படையினரின் ரோந்துப் படகில் இருந்த வீரர் ரத்நாயக்க என்பவர், கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து, தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபின்னர், நேற்று 550 விசைப்படகுகளில், 2500-க்கும் மேற்பட்டோர் கடலுக்குச் சென்றனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு முன்பாக நேற்று அதிகாலையில் இருந்தே மீன்வளத் துறை அதிகாரிகள், சர்வதேச கடல் எல்லையில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக ‘இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்லவேண்டாம்.’ என ஒலிப்பெருக்கியில் தொடர்ந்து அறிவிப்பு செய்தனர். மேலும், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அனைவரும் ஆதார் நகல், மீனவர் அடையாள அட்டை எடுத்துச் செல்லுமாறும், அனுமதி டோக்கன் பெற்றுச் செல்லுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்