கடலூர் மாவட்டத்தில் சிறுநீரக பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: அரசு மருத்துவமனையில் தினமும் 45 பேருக்கு டயாலிசிஸ்

By என்.முருகவேல்

கடலூர் மாவட்டத்தில் சிறுநீரகப் பாதிப்புள்ளாக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடலூரில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. போதிய பண வசதி இல்லாதவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதியின்றி உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுநீரகப் பாதிப்புக்குள்ளாகி கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெறவரும் நோயாளிகள், புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஏழ்மையான நோயாளிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் 18 டயாலிசிஸ் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தினசரி சுழற்சி முறையில் 45 பேருக்கும், மாதத்திற்கு 95 பேருக்கும் ரத்த சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இது தவிர நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் 2 டயாலிசிஸ் இயந்திரங்கள் மூலம் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விரைவில் பயன்பாட்டுக்கு வரும்

சிறுநீரக பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை மாவட்டம் முழுவதும் அதிகளவில் இருப்பதால், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய மருத்துவமனைகளிலும் தலா இரு ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை இன்னும் ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சைப் பிரிவு மருத்துவர் திருமுருகனிடம் கேட்டபோது, “நெய்வேலி மற்றும் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த நோயாளிகள் பெருமளவில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

தற்போது என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் 12 டயாலிசிஸ் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனுடன் கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்குச் சொந்தமான 6 இயந்திரங்களையும் இணைத்து 18 டயாலிசிஸ் இயந்திரங்கள் மூலம் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை மேற்கொண்டுவருகிறோம். இதன்மூலம் ஒரு நோயாளிக்கு மாதம் ரூ. 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சிகிச்சை செலவு மிச்சமாகிறது எனத் தெரிவித்தார்.

குடிநீரால் பாதிப்பு

இது குறித்து செவிலியர் லதாவிடம் கேட்டபோது, “பெரும்பாலான நோயாளிகள் சர்க்கரை நோய்க்குள்ளாகி, சரிவர கவனிக்காத பட்சத்தில் சிறுநீரகப் பாதிக்கப்பட்ட சூழலில் சிகிச்சைப் பெற வருகின்றனர்.குடிநீரால் சிறுநீரகப் பாதிப்புக்குள்ளாவோரும் இருக்கின்றனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தமிழகத்திலேயே அதிக அளவில் சிறுநீரக பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக கடலூர் அரசு மருத்துவமனை திகழ்கிறது. மாதத்திற்கு 95 நோயாளிகளுக்கு 800 முறை சுழற்சி முறையில் சிகிச்சை அளித்துவருகிறோம். இருப்பினும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. கூடுதலாக மேலும் 6 செவிலியர்கள் இருந்தால் இன்னும் பல நோயாளிகளுக்கு ரத்த சுத்திகரிப்புச் செய்ய முடியும்” எனத் தெரிவித்தார்.

காய கல்ப் விருது

மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மருத்துவமனைகளை தூய்மையாகவும், சிறப்பான சிகிச்சைகளையும், நோயாளிகளுடன் கனிவுடன் கவனிக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் மருத்துவமனைகளைக்கு கடந்த 3 ஆண்டுகளாக காய கல்ப் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி கடலூர் அரசு மருத்துவமனை கடந்த 2015 மற்றும் 2107 ஆகிய ஆண்டுகளில் காய கல்ப் விருது பெற்றிருப்பதாக மருத்துவமனை நிலைய மருத்துவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்