உதகை: நீலகிரி மாவட்டத்தில் நேற்று விடிய விடிய கனமழை பெய்தது. அதிகபட்சமாக தேவாலாவில் 186 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனால் கூடலூர் தாலுகாக்கு உட்பட்ட கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று இரவு (செவ்வாய்க்கிழமை) முதல் பெய்யத் தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. இதில் கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை இரவு முழுவதும் கனமழை பெய்தது.
அதிகபட்சமாக தேவாலாவில் 186 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனால் கூடலூர் தாலுகாக்கு உட்பட்ட கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார்.
உதகை மற்றும் குந்தா தாலுக்காக்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையிலும் விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றனர்.
» கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
» நீலகிரியில் பரவலாக மழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
மாவட்டத்தில் இன்று காலை (புதன்கிழமை) வரை பதிவான மழை நிலவரம்: கூடலூர் 148, பந்தலூர் 135, சேரங்கோடு 124, அவிலாஞ்சி 110, பாடந்துறை 90, ஓவேலி 88, அப்பர் பவானி 69, செருமுள்ளி 69, நடுவட்டம் 52, கிளன்மார்கன் 40, குந்தா 22, எமரால்டு 21, உதகை 18.8, கோத்தகிரி 14, கோடநாடு 13, கீழ் கோத்தகிரி 10, கெத்தை 8, குன்னூர் 8, கேத்தி 7, பர்லியார் 3 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago