திருப்புவனம்: கீழடியில் பல வண்ணங்களில் கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற அகழாய்வுகள் மூலம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரீகம் இருந்துள்ளது கண்டறியப்பட்டது. ஏற்கெனவே 9 கட்ட அகழாய்வு பணிகள் மூலம் பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், 10-ம் கட்ட அகழாய்வு பணியை ஜூன் 18-ம் தேதி கீழடி, கொந்தகை ஆகிய 2 இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடியே காணொலி மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கீழடியில் 2 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக சில அடி ஆழத்திலேயே பல வண்ணங்களில் கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை 27 மணிகள் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். விரைவில் கொந்தகையில் அகழாய்வுப் பணி தொடங்கப்பட உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago