நாமக்கல்: கோகுல்ராஜ் கும்பத்தினருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை திரும்ப பெற வலியுறுத்தி அக்கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள யுவராஜின் தாயார் ரத்தினம் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். kf
இதுதொடர்பாக யுவராஜின் தாயார் ரத்தினம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது: கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி ரயில்வே பாதையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஈரோடு ரயில்வே போலீஸாரால் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இச்சூழலில் இறந்தவரின் குடும்பத்தினர், அவர் சார்ந்த சமூகத்தினரும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு, சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினர். இதையடுத்து கொலைக்கான இழப்பீடு காசோலையாக இறந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கை வரும் முன்பே கொலைக்கான இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த இழப்பீடு தொகையை திரும்ப பெற கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி எனது மகன் எழுத்துப்பூர்வமாக மனு அளித்தார்.எனினும், இதுவரை அந்த மனு மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனது மகன் அனுப்பிய மனு மீது நடவடிக்கை மேற்கொண்டு இழப்பீடு தொகையை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago