கோவையை அடுத்து திருச்சி விமான நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல்

By தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் இன்று (திங்கள்கிழமை) காலை வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் வந்தது. திருச்சி விமான நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் சென்னை மண்டல அலுவலகத்துக்கு இமெயில் மூலம் வந்தது.

இது குறித்து சென்னை மண்டல அலுவலக அதிகாரிகள் திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணிக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து வெடிகுண்டு கண்டறியும் குழு அமைத்து சிஐஎஸ்எப் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அலுவலர்கள் திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை சோதனை நடத்தினர். அதில் எதுவும் சிக்கவில்லை. இதனால் திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவைக்கும் மிரட்டல்: கோவை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் 40 விமான நிலையங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், கோவை உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களுக்கும் இன்று (திங்கள்கிழமை) காலை மீண்டும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE