சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் இன்று 100 இடங்களில் 24 மணிநேர உண்ணாவிரதம்

By செய்திப்பிரிவு

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி தமி ழகம் முழுவதும் 100 இடங்களில் சிஐடியு சங்கத்தினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) நிர்வாகிகள் கூறியதாவது:

தமிழக மக்களுக்கு போக்கு வரத்து சேவையை அளிக்கும் போக்குவரத்துக் கழகங்கள் மிகச்சிறந்த பொதுத்துறை நிறுவனமாகும். இக்கழகங்கள் சேவைத்துறையாக செயல்படுவதால் கடும் இழப்பை சந்திக்கின்றன. எனவே, போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட தொகை சுமார் ரூ.15 ஆயிரம் கோடியை நிர்வாகங்கள் செலவு செய்துவிட்டன. இதனால் பணி ஓய்வின்போது தொழிலாளர்கள் வெறும்கையோடு வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.

ஓய்வு பெற்றவர்களுக்கு 104 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை. எனவே, ஓய்வூதியர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு அனைவருக்கும் பழையஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டும். ஒப்பந்த முறையில் ஊழியர்களை நியமிக்கக் கூடாது.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை தொழிலாளர்கள் மத்தியில் விளக்கிச் சொல்லும் வகையில் ஜூன் 10முதல் 15-ம் தேதி வரை வாயிற்கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இன்று (ஜூன் 24) காலை 10 மணி முதல் 25-ம் தேதி காலை 10 மணி வரையிலான 24 மணி நேரம் 100 மையங்களில் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளோம். சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழக தலைமையகம் உள்ளிட்ட 6 இடங்களில் உண்ணாவிரதம் நடைபெறும். இவ்வாறு தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்