விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் வரும் 10-ம் தேதி நடை பெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13-ம் தேதி எண்ணப்படுகின்றன. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கி 21-ம் தேதி முடிவடைந்தது.
இத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா உள்பட 56 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஜூன் 24) நடைபெறுகிறது.
இந்நிலையில், திமுக வேட்பா ளர் அன்னியூர் சிவாவுக்கு ரூ.1 கோடியே 9 லட்சத்து 8 ஆயிரத்து 944-க்கும், அவரது மனைவி வனிதா பெயரில் ரூ.2 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்து 336-க்கும், மகள் ஹர்ஷதா சுடர் பெயரில் ரூ.47 லட்சத்து 30 ஆயிரத்து 733-க்கும், மகன் திரிலோக்ஹரி பெயரில் ரூ.19 லட்சத்து 58 ஆயிரத்து 317-க்கும் அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்னியூர் சிவா பெயரில் ரூ.90 லட்சத்து 96 ஆயிரத்துக்கும், அவரது மனைவி வனிதா பெயரில் ரூ.33 லட்சத்து 6 ஆயிரத்து 370-க்கும் அசையா சொத்துக்கள் இருப்பதாகவும், இதுதவிர வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அன்னியூர் சிவா, ரூ.1 கோடியே 28 லட்சத்து 92 ஆயிரத்து 19-ம், அவரது மனைவி பெயரில் ரூ.55 லட்சத்து 41 ஆயிரத்து 409-ம் கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
» கரூரில் நடைபெறாத அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் தலைமறைவு காரணமா?
» ரஷ்யாவில் தேவாலயம், யூத வழிபாட்டுத் தலத்தில் தாக்குதல்: 15 காவலர்கள் உள்பட பலர் பலி
பாமக வேட்பாளர் அன்புமணிக்கு ரூ.11 லட்சத்து 61 ஆயிரத்து 187-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.17 லட்சத்துக்கு அசையா சொத்துக்கள் இருப்பதாகவும், வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.15 லட்சத்து 84 ஆயிரத்து 100 மதிப்பில் கடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது மனைவி ஜெயலட்சுமி பெயரில் ரூ.16 லட்சத்து 54 ஆயிரத்து 23-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.39 லட்சத்து 23 ஆயிரத்துக்கு அசையா சொத்துக்கள் இருப்பதாகவும், வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.1 லட்சம் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா பெயரில் ரூ.4 லட்சத்து 82 ஆயிரத்து 500-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.2 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் நகை கடன் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago